
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள விடுதியில், மாணவிகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பவர்களை வன்கொடுமை செய்வதாகவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்த விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவியின் பெற்றோரே இதுகுறித்த புகாரைத் தமிழக முதலமைச்சருக்கும் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் சமூகநீதி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்குப் பெரும்பாலும் விடுதிக்குள்ளேயே சாதியக் கொடுமைகளும், மத ரீதியான அடக்குமுறைகளும் நடப்பதுதான் திமுகவின் சமூகநீதியா? என்று வினவியுள்ளார். அரசு விடுதியில் பணியாற்றும் ஒரு அரசு காப்பாளருக்கு மதமாற்றம் செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்தது? என்றும் நாகேந்திரன் வினவியுள்ளார்.




