
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தின்படி எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 தொடர்பாகத் திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதிக்குத் தேர்தல் பணிகளில் ஈடுத்தப்படவுள்ள பறக்கும்படை, நிலைக்கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு, வீடியோ பார்வைக்குழு, கணக்கியல் குழு, மற்றும் தேர்தல் செலவினக்குழு, ஆகிய தேர்தல் அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் பயிற்சி நடத்தப்பட்டது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக வணிகர்கள், விவசாயிகள், தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்களும் தேர்தல் விதிமுறைப்படி ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரமும், ரூபாய் 10 ஆயிரம் அதற்கு மேல் மதிப்புள்ள பரிசுப் பொருட்களுக்கு ரசீதும் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் குமரன், வருவாய் கோட்டாட்சியர்கள் மந்தாகினி, பாலசுப்பிரமணியன், செய்யார் சார் ஆட்சியர் பல்லவி வர்மா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அனைத்து தேர்தல் குழுவின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

