Madurai: கட்டுமான பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்!

Advertisements

கட்டுமானத் துறையின் கனிம பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கக்கோரி கட்டுமான சங்கங்கள் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அகில இந்திய கட்டடுனர்கள் சங்கம் மற்றும் கட்டிட பொறியாளர் சங்கம் உள்ளிட்ட ஏழு சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான ஒப்பந்ததாரர்கள்கட்டுமான பொருட்கள் ஆன கருங்கல் ஜல்லி Mசாண்ட், P சாண்ட் உள்ளிட்ட கனிம பொருட்களின் விலை 50 சதவீதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளது,

இதனால் கட்டுமான துறையினரும் பொதுமக்களும் தொடர்ந்து கட்டிடப் பணிகளைச் செயல்படுத்த முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும். இந்தப் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கட்டுமான துறையின் கனிமப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கக் கோரியும் தற்போது நடைபெற்று வரும் வேலைகளை முடிக்கச் சந்தை விலைக்கு ஏற்றவாறு பட்டியலை அரசு உயர்த்தி தரவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.அகில இந்திய கட்டுனர்கள் சங்க தலைவர் முருகேசன் இந்த ஆர்ப்பாட்டத்தில்அகில இந்திய கட்டடுனர்கள் சங்கம் மற்றும் கட்டிட பொறியாளர் சங்கம் உள்ளிட்ட ஏழு சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *