
மேஷம்

இன்று மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் நேர்மையான முயற்சி மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வீர்கள். விரைந்து முடிவெடுப்பீர்கள்.பணியை மகிழ்ச்சியுடன் விரும்பி செய்வீர்கள். சுய வளர்ச்சியின் மூலம் பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பாமல் கடினமாக உழைப்பீர்கள்.இன்று உங்கள் துணையுடன் இணைந்திருந்து மகிழ்வீர்கள். இனிமையான வாரத்தைகளை மென்மையாக பேசி இருவரும் நல்ல புரிந்துணர்வை வளர்த்துக்கொள்வீர்கள்.உங்கள் கடின உழைப்பின் காரணமாக ஊக்கத்தொகை அல்லது சலுகைகள் வகையல் பண வரவு காணப்படும். உங்கள் பணியில் நேர்மையாக இருப்பீர்கள்.இன்று சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கிய பிரச்சினை ஏதும் இருக்காது.
ரிஷபம்

இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. தவறான விளைவுகள் ஏற்படாமல் இருக்க எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் யோசித்து செய்ய வேண்டும். பிறரோடு உரையாடும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.உங்கள் பணிகளை திறமையாக ஆற்றுவதில் சில ஏமாற்றங்களையும் தடைகளையும் சந்திக்க நேரும். சகபணியாளர்களுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்காது. துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். உரையாடும் போதும் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் போதும் அமைதியாக அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.இன்று ஏற்படும் செலவுகளை நீங்கள் தவிர்க்க முடியாது. என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. தேவையற்ற செலவினங்கள் ஏற்படலாம்.முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது அதிக வேலை காரணமாக சோர்ந்து போவீர்கள்.
மிதுனம்

இன்று தடைகள் நிறைந்து காணப்படும். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். கடினமான சூழ்நிலை இருந்தாலும் அதனை லேசாக எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். வெறுமையை உணர்வீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.பணியிடச்சூழல் சுமூகமாக இருக்காது. உங்கள் பணிகளை எளிதாக ஆற்றுவதில் சில தாமதங்கள் காணப்படும்.உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்பட்டு இருப்பதை சிறிதளவு வெளிப்படுத்துவீர்கள். இதனை தவிர்த்தல் அவசியம். உங்கள் துணையிடம் நகைச்சுவையான அணுகுமுறை தேவை.இன்று அதிக பண வரவிற்கான வாய்ப்புகள் குறைவு. செலவுகள் குவிந்து கானபப்டும். நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகள் சாதகமாக இருக்காது. உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரும். கண் சம்பந்தமான பிரச்சினை காணப்படும்.
கடகம்

இன்று ஆக்கபூர்வமான நாளாக இருக்கும். நண்பர்களால் பயன் அடைந்து மகிழ்வீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள்.பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். உங்கள் சகபணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். உங்கள் செயல்திறனில் மிகுந்த திருப்தி காண்பீர்கள். இன்று உங்கள் துணையிடம் மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.சிறப்பானநாள். இன்று புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள். நல்ல தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நீங்கள் இருவரும் புதிய மனிதர்களை சந்திப்பீர்கள்.இன்று பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். பயனுள்ள சொத்துக்களை வாங்குவதில் உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள்.தேக ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். உங்களிடம் காணப்படும் ஆற்றலும் உறுதியும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
சிம்மம்

இன்று அமைதியின்மை காணப்படும். இன்றைய செயல்களை நன்றாக சிந்தித்து கவனமுடன் முடிவெடுத்து செய்ய வேண்டும். இன்றைய சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணத்தை பராமரிக்க வேண்டும்.பணியில் உங்கள் முன்னேற்றம் அதிக அளவில் காணப்படாது.பணிச்சுமை அதிகமாக இருக்கும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு கொள்ள மாட்டீர்கள். அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் உங்கள் துணையுடன் சிறந்த தருணங்களை பகிர்ந்து கொள்ளலாம்.சம்பாதிக்கும் வாய்ப்பு குறைவு. நீங்கள் இன்று எதிபார்த்த அளவிற்கு பணம் சம்பாதிக்க இயலாது.தலைவலி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மகிழ்ச்சியுடன் இருந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
கன்னி

மோதல்களைத் தவிர்க்க அறிமுகம் இல்லாத நபர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் கவனமாகப் பழக வேண்டும். மற்றவர்களுடன் பேசும் போது கவனம் தேவை.பணியிடச்சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. சரியாக திட்டமிட்டு அதனை முறையாக ஆற்றுவது சிறந்தது.குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக கருத்து வேறுபாடு காணப்படும். உங்கள் துணையுடன் இன்று மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது.அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக இன்று தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரலாம். போதிய அளவு பணம் சம்பாதிக்க இயலாது.உயரழுத்த பாதிப்பு காணப்படும். இதனால் சிறிது சோர்ந்து காணப்படுவீர்கள்.
துலாம்

இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். நம்பிக்கையுடன் நேர்மறை எண்ணத்தோடு இருந்தால் இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி காணலாம்.பணியில் ஏமாற்றமான சூழ்நிலை காணப்படும். பணியிடச்சூழல் சுமூகமாக இருக்காது. இது உங்களுக்கு கவலையை அளிக்கும். மிகுந்த பொறுமை தேவை.நீங்கள் எந்தவொரு விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்வதன் காரணமாக உங்கள் துணையுடன்மோதல் ஏற்படும். உங்கள் துணையுடன் ஆரோக்கியமான உறவை பராமரிக்க அமைதியாக சகஜமாக இருக்க வேண்டும். உங்கள் துணையிடம் பொறுமையையும் அன்பையும் வெளிப்படுத்த வேண்டும்.இன்று தேவையற்ற செலவுகள் செய்ய நேரும். இது உங்களுக்கு மிகுந்த கவலையை உண்டாக்கும். அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படும்.மன உளைச்சல் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நலமுடன் இருக்க யோகா மேற்கொள்ளுங்கள்.
விருச்சிகம்

இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் சமயோசித புத்தியால் இன்றைய நாளை உற்சாகமாக்குவீர்கள்.உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். சாதனை படைத்த உணர்வு மனதில் நிரம்பியிருக்கும்.உங்கள் துணையிடம் நகைச்சுவை உணர்வை பகிர்ந்துகொள்வீர்கள். இதன் மூலம் அவர் மகிழ்ச்சியடைந்து உறவில் ஒரு நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.பணப்புழக்கம் திருப்தியாக இருக்கும். உங்கள் சேமிப்பை உயர்த்த முடியும். இன்று முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
தனுசு

இன்று அனைத்தும் சுமுகமாக நடக்கும். உங்கள் சொந்த முடிவுகளை எடுப்பதில் இன்று உறுதியாக இருப்பீர்கள். உங்கள் இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.பணிச்சூழல் சிறப்பாக காணப்படும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் பெருகி காணப்படும்.
உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பேசுவீர்கள். இதனால் உறவுப் பிணைப்பு வலுப்படும்.உங்கள் சம்பாதிக்கும் திறனை உயர்த்த முடியும். கணிசமான தொகை சம்பாதிக்க அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்

முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். தாய்வழி உறவினர் களால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு சற்று கவலை தரும். வாழ்க்கைத் துணை கேட்டதை வாங்கித் தருவதன் மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபட பல வகைகளில் நன்மைகள் ஏற்படும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.
கும்பம்

நம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். இன்று நற்பலன் காண உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் வளர்ச்சிக்கான பாதையில் தடைகளை சந்திக்க நேரும்.முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும்.பணியின் போது தவறுகள் நேர வாய்ப்புள்ளது.உங்கள் பணிகளை திட்டமிட்டு முறையாக ஒழுங்கமைத்து ஆற்ற வேண்டியது அவசியம்.உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். இதனை தவிர்த்து அமைதியாக இருக்க வேண்டும்.இன்று பண நஷ்டம் காணப்படுகின்றது. பயணத்தின் போது பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.இன்று ஆரோக்கிய பிரச்சினை காணப்படும். கால் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மீனம்

இன்று தன்னம்பிக்கையுடன் கானப்படுவிர்கள். இதனால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.வேலை தொடர்பான பயணம் காணப்படும். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்துவீர்கள். இதனால் இருவரிடையே உறவு வலுப்படும்.இன்று நிதிநிலை சிறப்பாக இருக்கும் புதிய முதலீடுகளில் பங்கு கொள்ளலாம்.அதனால் உங்கள் நோக்கம் நிறைவேறும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் நன்கு பராமரிப்பீர்கள்.

