Lemon Juice: எலுமிச்சை சாறு குடித்து மருத்துவமனையில் அனுமதி!

திருவள்ளூர்: பொன்னேரி அருகே ஒத்தடம் கொடுக்கப் பயன்படும் ஐஸ்கட்டியை ஜூஸில் கலந்து குடித்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் சிலர் நேற்று எலுமிச்சை ஜூஸ் தயாரித்துள்ளனர். அதில் ஒருவரது வீட்டில் ஃப்ரிட்ஜில் இருந்த ஐஸ்கட்டி பாக்கெட்டை ஜூஸில் கலந்து குடித்துள்ளனர். அந்த ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கப் பயன்படும் சிலிக்கான் ஜெல் ஐஸ் என்பது தெரியவந்தது.

இதுபற்றிச் சிறுவர்கள் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து ஆரணி சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிறுவர்கள், சிறுமிகள் உள்ளிட்ட 13 பேர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *