Steel Authority of India Limited: மத்திய அரசின் SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான SAIL – நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, வரும் 31 ஆம் தேதி தான் கடைசி நாள்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா(SAIL). இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜ்மண்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

SAIL Management Trainee Vacancies 92 posts, Dec 31 is last date to apply

பணியிடங்கள் விவரம்:

கெமிக்கல் இன்ஜினியரிங் (03 பணியிடங்கள்),
சிவில் இன்ஜினியரிங் (03),
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்(03),
இன்ஸ்ட்ருமெண்டல் இன்ஜினியரிங் (26) ,
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (34),
Metallurgy இன்ஜினியரிங் (05),
மைனிங் ( 14)
ஆகிய துறைகளில் 92 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து இன்ஜினியரிங் படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

60 சதவீத மதிப்பெண்களுடன் துறை சார்ந்த பிரிவில் இன்ஜினியரிங் படிப்பு முடித்து இருப்பது அவசியம்.

வயது வரம்பு:

வயது வரம்பை பொறுத்தவரை எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஒபிசி பிரிவினர் 31 வயது வரை விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 – ஆண்டுகள் வரை வயது வரம்பில் சலுகை உண்டு. துறையில் பணியாற்றும் விண்ணப்பதாரர்களுக்கு 45 வயது வரை விண்ணப்பிக்க அனுமதி உண்டு.

தேர்வு முறை:

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு குரூப் டிஸ்கஷன் நடைபெறும். பின்னர் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு ஆண்டுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலம் முடிந்த பிறகு ஒரு வருடம் தகுதிகான் காலம் (probation) ஆகும்.

சம்பளம் எவ்வளவு;

சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்க்ள் ஓராண்டு காலம் பயிற்சியில் இருப்பார்கள். அப்போது மாத ஊதியமாக ரூ.50,000 முதல் ரூ. 1,60,000 வழங்கப்படும். ஓராண்டு பயிற்சி காலம் முடிவடைந்த பிறகு அவர்களின் மாத ஊதியம் ரூ.60,000 முதல் ரூ. 1,80,000 என உயர்த்தப்படும்

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக ஒபிசி பிரிவினர் ரூ.700 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 31.12.2023 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *