Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 05.03.2024

Advertisements

மேஷம்

எதிர்பார்த்த உதவிகள் தக்கநேரத்தில் கிடைக்கும் என்றாலும் நிதானமாக இருப்பது நல்லது. வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாலை நேரத்தில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

ரிஷபம்

 மாலை 04.21 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

 

மிதுனம்

நீங்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

 

கடகம்

உங்கள் பொருளாதார நிலையும், ஆரோக்கியமும் சற்று மந்தமாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்கள் கிட்டும்.

 

சிம்மம்

உங்களுக்கு எதிர்பாராத திடீர் பயணம் உண்டாகும். உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

கன்னி

 குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

 

துலாம்

புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். சுபமுயற்சிகளில் நற்செய்தி கிடைக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகமாக இருக்கும். எதிலும் கவனம் தேவை.

விருச்சிகம்

குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகத்தில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

தனுசு

உங்களுக்கு பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

 

மகரம்

 

 பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.

 

கும்பம்

உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் திறமைக்கேற்ற உயர்வு கிட்டும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

 

மீனம்

 

 

வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களால் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *