தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி.!

Advertisements

சென்னை திருமுல்லைவாயில் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி என்று செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை திருமுல்லைவாயில் காங்கிரஸ் கட்சியின் சக்தி அபியான் அமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேசினார். தவெக தலைவர் விஜய் அவர்கள் ராகுல் காந்தியை சந்திப்பதாக தகவல் ஏதும் இல்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருக்கும் வரை தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் மத்திய அரசை எதிர்த்து நின்றார். நீட், உதய் மின் திட்டம் என்று அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றார்.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. திமுக தலைமையில் இந்தியக் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *