
மேஷம்

இன்றைய நாள் சிறப்பாக இருப்பதைக் காண்பீர்கள். உங்கள் வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள். புதிய மனிதர்களுடனான தொடர்புகள் இன்று ஏற்படும்.உங்கள் பணியில் வளர்ச்சி ஏற்படுத்துவீர்கள். உங்கள் முயற்சிக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.இன்று உங்கள் துணையிடம் உங்கள் அன்பை / காதலை வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவரிடையே நல்லுறவு ஏற்படும்.உங்களின் கையிருப்பு பணம் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அதனைக் கொண்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.உங்களிடம் காணப்படும் நம்பிக்கை உணர்வு காரணமாக இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்

புத்திசாலித்தனமாக திட்டமிடுவதன் மூலம் இன்று வெற்றி காணலாம். ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம வழிபாடு உங்களை தீங்கிலிருந்து காப்பாற்றும்.உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காதது போல உணர்வீர்கள். நீங்கள் நேர்மறையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.சில முக்கிய பிரச்சினைகளை கையாள வேண்டியிருக்கும்.உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வது உதவிகரமாக இருக்கும்.இன்று பணப்பற்றாக்குறை பாதிப்பை ஏற்படுத்தும். இன்று சூழ்நிலையை சமாளிப்பதை கடினமாக உணரவீர்கள். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. இன்று செரிமானக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. வெளியிடங்களில் உணவு உண்பதை தவிர்க்கவும்.
மிதுனம்

நீங்கள் செயல்களை முன்னுரிமைப்படி ஆற்ற வேண்டும். உங்கள் இலக்குகளில் வெற்றி அடைய நீங்கள் இன்னும் முயல வேண்டும்.இன்று நல்ல பலன்களைக் காண நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். இதன் மூலம் நீங்கள் அதிகப்படியான பணிகளை சமாளிக்க முடியும்.உங்கள் உணர்ச்சிப் பூர்வமான மனநிலையை உங்கள் துணையிடம் வெளிபடுத்துவீர்கள். இதனால் உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்படும்.இன்று பணப்பற்றாக்குறை காணப்படும். உங்கள் வீட்டை புனரமைப்பதற்கு பணத்தை பயன்படுத்துவீர்கள். பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.இன்று தோல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம். எண்ணெய் பதார்த்தங்கள் உண்பதை தவிர்க்கவும்.
கடகம்

இன்று அதிகப்படியான செயல்கள் காணப்படும். அவைகளை முன்னுரிமைப்படி ஆற்ற வேண்டும். நீங்கள் தொழில் சார்ந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். உங்கள் மேலதிகாரிகள் உங்கள் பணியைப் பாராட்டுவார்கள்.நீங்கள் உங்கள் துணையிடம் சகஜமாக நடந்து கொள்ள வேண்டும். இருவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.இன்று அதிக பணம் சம்பாதிப்பீர்கள். உங்கள் வங்கியிருப்பு உயரக் காண்பீர்கள். இன்று புதிய முதலீட்டிற்கு திட்டமிடுவீர்கள்.உங்களிடம் காணப்படும் உற்சாகம் காரணமாக இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
சிம்மம்

மனதில் உள்ள குழப்பம் காரணமாக உங்கள் தொடர்பாடலில் பிரச்சினை காணப்படும். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை.பணி நிமித்தமான பயணம் காணப்படுகின்றது. அதன் காரணமாக பதட்டம் ஏற்படும். உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும்.உங்கள் நேர்மை மற்றும் உண்மை காரணமாக உங்கள் துணையுடன் நல்லுறவு காணப்படும்.இதனால் உறவில் நல்லிணக்கமும் மகிழ்ச்சியும் காணப்படும்.தேவையற்ற சில விஷயங்களுக்கு பணம் செலவு செய்ய நேரும். அதனால் இன்று சிறிய அளவிலான கடன் வாங்குவீர்கள்.பதட்டம் மற்றும் ஓய்வின்மை காரணமாக இன்று களைப்பாக உணர்வீர்கள்.இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி

இன்று உங்கள் திறமை மற்றும் அறிவை வளர்த்துக் கொள்ளும் நாள். அதே சமயத்தில் உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.நீங்கள் பணயில் வெற்றி காண பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். இல்லாவிடில் வெற்றி காண்பது அரிது. பணியில் வெற்றி காண அதனை முன்கூட்டி அறிந்து வைத்திருப்பது நல்லது.நட்பான பேச்சின் மூலம் உங்கள் துணையுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதன்று. உணர்ச்சிவசப்படும் நிலை உறவின் இனிமையை பாதிக்கும்.உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவில் இன்று பணம் சேமிக்க இயலாது. இன்று பணத்தை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.பசியின்மையால் பாதிக்கப்படுவீர்கள். இதனால் செரிமானப் பிரச்சினை ஏற்படும். மருத்துவரை கலந்தாலோசிப்பது சிறந்தது.
துலாம்

இன்று உங்கள் செயல்களுக்கு தக்க பலன்கள் கிடைக்காது. இது உங்களுக்கு சிறிது ஏமாற்றத்தை அளிக்கும். பொறுமையும் நேர்மறை அணுகுமுறையும் அவசியம்.இன்று பணிகள் அதிகமாக காணப்படும் இன்று தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள். ஆரோக்கியமான உறவை பராமரிக்க இத்தகைய உணர்வை தவிர்க்க வேண்டும்.இன்று பண வரவு குறைந்து காணப்படும். கூடுதல் செலவுகள் செய்ய நேரும்.செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினையால் பாதிக்கப்படுவீர்கள். ஆரோக்கியமாய் இருப்பதற்கு எண்ணெய் மற்றும் கார உணவு வகைகளை தவிர்க்கவும்.
விருச்சிகம்

இன்று உங்களுக்கு சிறிது அதிர்ஷ்டம் காணப்படும். உங்கள் தந்தையின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஆன்மீக யாத்திரை உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.உங்கள் பணிகளை விரைந்து முடிக்க நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயல் பட வேண்டும். உங்கள் திறமையும் நேர்மையும் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.உங்கள் துணையுடன் நட்பான முறையில் அணுகுவது சிறந்தது. இதனால் நல்ல புரிந்துணர்வு காணப்படும்.இன்று பண வரவு அதிகமாக காணப்படும். உங்கள் சேமிப்பு கணிசமாக உயரும். பணத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவீர்கள்.உங்களிடம் காணப்படும் உறுதி மற்றும் மனதிடம் காரணமாக இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
தனுசு

இன்று சிறிது தடைகளுக்குப் பின் வெற்றியைக் காண்பீர்கள். என்றாலும் சிறப்பாக திட்டமிடுவதன் மூலம் மட்டுமே இன்று நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றியைக் காண முடியும்.கடின உழைப்பு மூலம் நீங்கள் இன்று வெற்றி பெற இயலும். உங்கள் பணிகளை விரைவில் முடிக்க நீங்கள் திட்டமிட வேண்டும். உங்கள் துணையுடன் மனம் திறந்து நட்பாக பழகுவதன் மூலம் சிறந்த புரிந்துணர்வு ஏற்படுத்தலாம். இதன் மூலம் நல்லுறவும் உறவில் திருப்தியும் ஏற்படும்.இன்று பண வரவு செலவு இரண்டும் காணப்படும். எதிர்பாராத வகையில் பண வரவு காணப்படும்.முறையாக ஓய்வெடுப்பதன் மூலம் நீங்கள் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். கால் மற்றும் தொடைகளில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. யோகா மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
மகரம்

முறையான முயற்சி உங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற உதவும். பலன்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். நண்பர்களின் தொடர்பு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.உங்கள் பணிகளை முடிக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் நீங்கள் பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது உங்கள் பணிகளை ஆற்றும் பொழுது கவனம் தேவை.
உறவில் சிறிது அனுசரித்துப் போவது சிறந்த பலனைத் தரும். உங்கள் துணையுடன் நல்லுறவு பராமரிக்க இது உதவும்.இன்று பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். என்றாலும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் மற்றும் சேமிக்க வேண்டும் என்ற ஆவல் உங்களிடம் இருக்கும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நோய் எதிர்ப்புசக்தியின்மை காரணமாக கால் வலி மற்றும் தோள்களில் விறைப்புத்தன்மை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
கும்பம்

இன்று சவால்கள் நிறைந்து காணப்படும். பொறுமையாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.உங்கள் தவறுகளை அடுத்தவர் சுட்டிக் காட்டாமல் இருக்க பணிகளை ஆற்றும் பொழுது கவனம் தேவை.குடும்ப பிரச்சினைகள் காரணமாக உறவில் குழப்பம் ஏற்படலாம். இதனால் உங்கள் துணையுடனான உறவில் நல்லிணக்கம் குறைந்து காணப்படும்.இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். பயணத்தின் போது பண இழப்பு நேரலாம்.ஒவ்வாமை காரணமாக சளி ஏற்படலாம். இதனால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
மீனம்

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இது உகந்த நாள். பழைய நண்பர்களை சந்திப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஆன்மீக ஈடுபாடு ஆறுதலை அளிக்கும்.நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணியில் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். நம்பிக்கையான எண்ணங்கள் மற்றும் செயல்கள் மூலம் இன்றைய நாளை நீங்கள் உற்சாகமாக்கிக் கொள்ளலாம். இந்த உணர்ச்சி உறவின் சுணக்கங்களை நீக்கி விடும்.பங்கு வர்த்தகம் மூலம் பணம் சேர்க்கும் வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் வரும் பணத்தை சேமிப்பீர்கள்.வயிறு உப்பசம் காரணமாக இன்று அசௌகரியமாக உணர்வீர்கள். உணவில் கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்க்கவும்.


