Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 15.11.2023

Advertisements

இன்றைய ராசிப்பலன் – 15.11.2023

ஜோதிடச்சுடர்.

Dr.N,ஞானரதம்

M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,

 

மேசம்

மறக்க முடியாத சம்பவம் நடக்கும்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும்.
பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

ரிசபம்

காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.
வாகன வசதிப் பெருகும்.
உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

மிதுனம்

வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.
கணவன்- மனைவிக்குள் பிணக்குகள் நீங்கும்.
நீண்ட நாட்களாக இருந்த ஒற்றைத் தலைவலி நீங்கும்.
வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

கடகம்

உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.
உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
தேக பலம் உண்டாகும்.
எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

சிம்மம்

குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும்.
மாமன் வழி உறவினர்கள் கை கொடுப்பர்.
பிரபலங்களின் திடீர் சந்திப்பு உற்சாகத்தைத் தரும்.
அதிக சம்பளத்திற்காக புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள்.

கன்னி

வாடிக்கையாளர்களை அதிகரிக்க சலுகைகளை அறிவிப்பீர்கள்.
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துபோகும்.
தன் கீழ் பணிபுரிபவர்களிடம் கோபத்தை காட்டாதீர்கள்.
பிள்ளைகள் தங்கள் தவறை உணர்வர்.

துலாம்

பங்குச் சந்தையில் கவனம் தேவை.
அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரிப்பது நல்லது. குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும்.
வாடிக்கையாளர்களிடம் வாய்நிதானம் தேவை.

விருச்சிகம்

அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.
மாணவர்கள் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.
உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.

தனுசு

சுப காரியங்கள் கை கூடும்.
காதலர்கள் சிந்திப்பது நல்லது.
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள்.
நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

மகரம்

கடன் பிரச்சினை தீரும்.
யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம்.
மாணவர்கள் கல்விச் சுற்றுலாவிற்கு ஆயத்தம் ஆவர்.
வியாபாரத்தில் விற்பனை கூடும்.

கும்பம்

மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர்.
பந்தங்கள் வீடு தேடி வந்து அன்பு பாராட்டுவர்.
வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் தலையீடு உண்டு.

மீனம்

உங்கள் செயலில் உற்சாகம் வெளிப்படும்.
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.
உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள்.
வீட்டில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *