தமிழில் என்ட்ரி ஆனார் மாளவிகா மனோஜ்!
கேரளாவில் பிறந்து சவூதி அரேபியாவில் வளர்ந்து மாடலிங் துறைக்கு வந்தவர் மாளவிகா மனோஜ். கடந்த ஆண்டு ‘பிரகாஷன் பரக்கட்டே’ என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். பின்னர் ‘நாயாடி’ என்ற படத்தில் நடித்தார். தற்போது அவர் தமிழுக்கு வந்திருக்கிறார்.
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில் உருவாகும் ஜோ படத்தில் ரியோ ராஜ் ஜோடியாக நடித்து வருகிறார். இவர்களுடன் அன்பு தாசன், ஏகன், பவ்யா திரிக்கா நடிக்கிறார்கள். ’மீசையை முறுக்கு’, ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஹரிஹரன் ராம் இயக்குகிறார்.
சித்து குமார் இசை அமைக்கிறார், ராகுல் கே.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் ஹரிஹரன் ராம் கூறும்போது “கேரளா தமிழ் நாடு எல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் சில மாணவ மாணவியரின் 17 வயது முதல் 27 வயது வரையிலான வாழ்க்கையை மூன்று கட்டங்களாக சொல்லும் படம் இது.
ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞனுக்கும் கேரளப் பெண்ணுக்கும் வரும் காதலும் அதன் விளைவுகளுமே இந்தப் படம். தமிழ் இளைஞனாக ரியோ ராஜ் நடிக்கிறார். அச்சு அசலான ஒரு கேரளா பெண்ணை தேடியபோது சமீபகாலமாக கேரளாவில் பரவலாக பேசப்பட்டு வரும் நடிகையான மாளவிகா மனோஜ் பொருத்தமாக தெரிந்தார். அவரே நடித்தும் உள்ளார். தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்பது அவரது நடிப்பில் இருந்தே தெரிகிறது. என்றார்.