Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 19.12.2023

Advertisements
மேஷம்

 

முயற்சியை கைவிடாத மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு தன லாபங்கள் அதிகரிக்கும். இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் மன சந்தோஷமும், திருப்தியும் இருக்கும். இன்று பங்கு சந்தை முதலீடுகள் லாபத்தை தரும். செலவுகள் குறையும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்று மனத்திருப்தியும், மனதில் சந்தோஷமும் உண்டாகும். மாலை நேரத்தில் நற்செய்திகள் தேடி வரும். குலதெய்வத்தின் அருள் கூடும். இன்று ஐயப்பனை வழிபட சிறப்பான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 1.

ரிஷபம்

தெளிவான சிந்தனை உள்ள ரிஷப ராசிக்காரர்களே இன்று நாள் முழுவதும் நீங்கள் தெளிவான சிந்தனையுடன் முடிவெடுக்க முடியும். மனதில் இருக்கக்கூடிய பய உணர்வுகள் நீங்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறலாம். இன்று உங்களுக்கு லாபங்கள் நிறைந்ததாக இருக்கும். சகோதர, சகோதரிகளின் உறவுகள் மேம்படும். இன்று சண்டை சச்சரவுகள் இல்லாத நாளாக அமைகிறது.  வலம்புரி விநாயகரின் வழிபாடு சிறந்தது. இன்றைய அதிர்ஷ்ட எண் 3.

 

மிதுனம்

 

எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் மிதுன ராசிக்காரர்களே இன்று நாள் முழுவதும் உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றிகள் உண்டாகும். கடன் வாங்குவது, கடன் கொடுப்பதை தவிர்க்கவும். இன்று புதிய வியாபார தொடக்கங்கள் நல்ல வெற்றியை தரும். இன்று இருசக்கர வாகனங்கள் வாங்குவது, மாற்றுவது தொடர்பாக நல்ல சூழல் நிலவும். குடும்ப சொத்து விவகாரங்கள் இன்று பேசி தீர்க்கப்படும். தூரத்து செய்து ஒன்று இனிமையானதாக அமையும். இன்று ரங்கநாதரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 2.

கடகம்

 

கொடுத்த வாக்கை காப்பாற்றும் கடக ராசிக்காரர்களே இன்று நாள் முழுவதும் மன பயம் நீங்கும். இன்று பல நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு நல்ல விடை கிடைக்கும். இன்று உங்கள் வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்பாடு செய்யக்கூடிய சூழல் இருக்கும். துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கும். இன்று முருகப்பெருமானை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 4.

 

சிம்மம்

 

வீரமும் விவேகமும் நிறைந்த சிம்ம ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு நல்ல செய்திகள் காத்திருக்கிறது. பல நாட்களாக நீங்கள் முயற்சி செய்து, ஏமாந்து போன பண விஷயங்களில் வெற்றி உண்டாகும். தொலைந்த பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இன்று மாலை வேளையில் அம்மன் வழிபாடு செய்யவும். அம்மனுக்கு தீபம் ஏற்று வழிபாடு செய்ய எடுத்துக் காரியத்தில் வெற்றி உண்டாகும். நீண்ட தூர பயணத்தால் வெற்றி உண்டாகும். இன்று நரசிம்மரை வணங்கி வர இனிய சிறப்பான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 5.

கன்னி

 

பேச்சில் இனிமேல் நிறைந்த கன்னி ராசிக்காரர்களே இன்று பல நாட்களுக்கு பிறகு சந்திக்கக்கூடிய நபர்களால் உங்களுக்கு ஆதாயமான பலன்கள் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றிகள் உண்டு. பல மாதங்களாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த சில விஷயங்களை இன்று செய்து முடிக்க முடியும். இன்று உங்களிடம் விருப்பங்கள் நிறைவேறும்.திருமண யோகங்கள் சிலருக்கு கை கூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை கூடும். இன்று சித்தர்கள் வழிபாடு செய்துவர என் சிறப்பான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 6.

 

துலாம்

 

கனவை நினைவாக்கும் துலா ராசிக்காரர்களே இன்று வழக்குகள், விசாரணைகளில் வெற்றிகள் கிடைக்கும். பல நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற சில விஷயங்கள் நிறைவேறும். கடன் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பல நாள் கனவாக இருக்கும் வீடு, மனை வாங்குவது தொடர்பான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். தந்தை வழியால் லாபம் உண்டு. இன்று பழனி ஆண்டவரை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 3.

 

விருச்சிகம்

 

வெற்றிக்கனியை தனதாக்கும் விருச்சிக ராசிக்காரர்களே இன்று நாள் முழுவதும் உங்களுக்கு மன நிறைவு கிடைக்கும். இன்று காலை வேளையில் உங்களுக்கு நற்செய்திகளும் காத்திருக்கிறது. எடுத்த காரியத்தில் வெற்றிகள் உண்டாகும். என்று உங்களுக்கு நண்பர்கள் மூலமாக நன்மைகள் நடக்கும். இன்று வியாபாரம் தொடர்பாக கலவையான பலன்கள் கிடைக்கும். எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். உங்களின் வரவுகளை மனதில் வைத்துக் கொண்டு செலவிடவும். விநாயகர் ஆலய வழிபாடுகள் சிறந்தது. இன்று விநாயகரை வழிபட சிறப்பான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 7.

 

தனுசு

 

இனிமையான சொல்லால் அடுத்தவரை கவரும் தனுசு ராசிக்காரர்களே இன்று நாளும் முழுவதும் உங்களுக்கு மனத் திருப்தி கிடைக்கும். உங்களுக்கு சிறப்பான பலன் காத்திருக்கிறது.  குழந்தையின் கல்வி தொடர்பாக மன மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு போன்ற நல்ல செய்திகளை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உள்ளது குடும்பத்தில் உங்களின் பேச்சை இனிமையே கடைப்பிடிப்பது அவசியம். உங்கள் வார்த்தைகள் மற்றவர்களை கவர செய்யும். மேலும் இன்று குலதெய்வ வழிபாடு சிறப்பான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 8.

 

மகரம்

 

எதையும் சாதிக்கத் துடிக்கும் மகர ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு மனநிறைவை தரக்கூடியதாக இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் இன்று மனதிற்கு திருப்தியும், அலுவலகம் சார்ந்த விஷயங்களில் உயர்வு ஏற்படும் உங்கள் வேலைகளில் பிரச்சனை தொடர்பாக குடும்பத்தில் மன மகிழ்ச்சி ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல வெற்றிகள் உண்டாகும்.இன்றைய நாளில் நீங்கள் துர்கையை பிரார்த்தனை செய்வது. இன்றைய அதிர்ஷ்ட எண் 9.

கும்பம்

 

பிறருக்கு கொடுத்து மகிழும் கும்ப ராசிக்காரர்களே இன்று நாள் முழுவதும் மகத்தானதாக அமைகிறது. கும்ப ராகி நேயர்களுக்கு இன்று  பசு மாடுகளுக்கு உணவு அளிக்கவும். இன்று உங்கள் சொல் மற்றும் செயலில் கூடுதல் கவனம் தேவை. நிதானமாகவும், திட்டமிட்டும் செயல்படுவது அவசியம். அதன் மூலம் உங்களின் வேலைகளை முடிக்க முடியும். சுப  செலவுகள் இன்று தவிர்க்க முடியாததாக இருக்கும். இன்று பைரவரை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 1.

 

மீனம்

 

சஞ்சலங்கள் இருந்தாலும் சளைக்காமல் உழைக்கும்  ராசி காரர்களே இன்று நாள் முழுவதும் அலைச்சல் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வழக்குகள், விசாரணைகளில் வெற்றிகள் கிடைக்கும். இன்று பல நாட்களுக்கு பிறகு சந்திக்கக்கூடிய நபர்கள் மூலம் குடும்பத்தில் நன்மைகள் நடக்கும். இன்று நாளில் அன்னதானங்கள் செய்வது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு பணம் கணிசமான லாபம் ஏற்படும்  இன்று மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் முன் சிந்தித்து செயல்படவும். இன்று குரு பகவான் வழிபாடு செய்வதன் மூலம் சிறப்பான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 2.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *