தியாகிகளின் உதவித்தொகை உயர்வுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!
புதுச்சேரி: புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகையை ரூ.12,000 ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தியாகிகளுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டு வந்த நிலையில் 12,000ஆக உயர்த்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்ட அறிவிப்புக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.Pondicherry

