Lok Sabha Election 2024: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக தேடி தேடி இனிப்புகளை வாங்கிய ராகுல் காந்தி!

அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேக்கிரி ஊழியர்கள் ராகுல் காந்தியுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தமிழகத்தில் முதற்கட்டமாகவும், ஒரேகட்டமாகவும் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நெல்லையில் பிரசாரம் மேற்கொண்டார்.

நெல்லை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார். ராகுல் காந்தியுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்டார்.

முன்னதாக, பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழியில் காரை நிறுத்திய ராகுல் காந்தி, சாலையை கடந்து பேக்கிரி ஒன்றுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்புகளை வாங்கினார்.

பிறகு, பேக்கிரி ஊழியர்கள் ராகுல் காந்தியுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ராகுல் காந்தி, தான் வாங்கிய இனிப்பை வழங்கி மகிழ்ந்தநார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *