today rasipalan:இன்றைய ராசிபலன் – 24.08.2024

Advertisements

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆவணி மாதம் 8ம்- தேதி சனிக்கிழமை

நட்சத்திரம் : இன்று அதிகாலை 1.35 வரை ரேவதி பின்பு அஸ்வினி.

திதி : இன்று பிற்பகல் 01.25 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 07.45 – 08.45

நல்ல நேரம் மாலை : 4.45 – 5.45

ராகு காலம் காலை : 9.00 – 10.30

எமகண்டம் பிற்பகல் : 1.30 – 3.00

குளிகை காலை : 6.00 – 7.30

கௌரி நல்ல நேரம் காலை : 10.45 – 11.45

கௌரி நல்ல நேரம் இரவு : 9.30 – 10.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : மகம், பூரம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்


ரியல் எஸ்டேட், கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வருமானம் உயரும். தங்கள் பிள்ளைகள் விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை. எதிர்க்கட்சியினரின் பாராட்டு கிடைக்கும். மகளுக்குத் திருமணம் கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

ரிஷபம்


அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் நெருக்கமாவர். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். விரும்பிய பொருள் வாங்குவீர்கள். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். காதலர்களிடையே ஊடல் விலகும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மிதுனம்


வழக்குகளை இழுத்தடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். உடல் நலம் தேறும். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை

கடகம்


குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்வீர். தந்தைவழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். தம்பதிகளின் கருத்து ஒற்றுமை ஓங்கும். பூர்வீக சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். கூட்டுவியாபாரிகளிடையே நல்லிணக்கம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

சிம்மம்


இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக மகம் மற்றும் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களைத் தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கன்னி


உத்யோகத்தில் வரவேண்டிய பாக்கித் தொகை வந்து சேரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். மருத்துவர்கள் சாதனை படைப்பர். மாணவர்களின் முயற்சிகள் பலிதமாகும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புர். பழுதான வாகனம் சரியாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவர்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

துலாம்


எதிர்பார்த்த பணம் கிடைத்து விடும். தங்கள் குடும்பத்தில் உள்ள நல்ல விசயங்களுக்குத் தம்பதிகள் முடிவெடுத்து செயல்படுவர். நினைத்த காரியம் வெற்றி பெறும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

விருச்சிகம்


பூர்வீக சொத்தில் உள்ள வில்லங்கம் நீங்கும். தங்கள் பங்கு கைக்குக் கிடைக்கும். திருமணத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிட்டும். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். பொது இடத்தில் வெளிப்படையாகப் பேசிச் சிக்கிக் கொள்ள வேண்டாம். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும்.

அதிர்ஷ்ட நிறம் : கிரே

தனுசு


தங்கள் வங்கியில் டெபாசிட் உயரும். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். யோகா மற்றும் நடன வகுப்புகளில் மனம் நாடும். அதற்குண்டான முயற்சிகள் பலிக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும்.

அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு

மகரம்


எங்குச் சென்றாலும் உங்களுக்குச் செல்வாக்கு இருக்கும். கவலை வேண்டாம். கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. யாரிடமும் தங்கள் அந்தரங்க விசயத்தைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கும்பம்


குடும்பத்துடன் வெளியூர் பயணம் நடக்கும். அது தங்களுக்கு மகிழ்ச்சி தரும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுக்கு இடம் உண்டு. வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.

அதிர்ஷ்ட நிறங்கள் : சாம்பல்

மீனம்

பாதியில் முடங்கிக் கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *