மேஷம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நாள். அதிகமாகக் கோபப்படுவதை குறைத்து கொள்ளுங்கள். கவன சிதறல் காரணமாகப் பணிகளில் சில தவறுகள் ஏற்படும். அதனால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள். செலவுகள் அதிகமாகக் காணப்படும். தலைவலி காணப்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணிகளில் தவறுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் அமைதியாக நடந்து கொள்வது நல்லது. செலவுகள் சற்று அதிகமாகக் காணப்படும். மனஅழுத்தம் காரணமாகத் தலைவலி ஏற்படும்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டிய நாள். உங்கள் திறமைக்கான பாராட்டுக்கள் கிடைக்கும். உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. பணத்தை அதிகமாகச் செலவு செய்வீர்கள். முதுகு வலி இருக்கும். அதனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்..
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் பணிகளில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் துணியை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதுவரை வராத பணம் வந்து சேரும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். உங்கள் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்கள் பணிகளில் அதிக கவனம் தேவை. அப்போது தான் குறித்த நேரத்தில் பணிகளை உங்களால் முடிக்க முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். செலவுகள் அதிகமாகக் காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் தேவை. பணிச்சுமை அதிகமாகக் காணப்படும். சக பணியாளர்களுடன் சில சண்டைகள் உண்டாகும். உங்கள் வலிக்காத துணையிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். அதிகமாகச் செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். உங்களின் கடின உழைப்பால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். அதை நல்வழியில் பயன்படுத்துவீர்கள். மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். மகிழ்ச்சி அதிகமாகக் காணப்படும். உங்கள் பணிகள் கொஞ்சம் கவனம் தேவை. பணிகளைச் சரியாக முடிக்கத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நட்புடன் நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். மிகுந்த தைரியத்துடன் காணப்படுவீர்கள்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு தைரியமாக இருக்க வேண்டிய நாள். எதிலும் நம்பிக்கையாக இருங்கள். பணிகளை அதிகமாகக் காணப்படும். அதனால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையை நன்கு புரிந்து கொள்ளுங்கள். எதிர்பாராத செலவுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு குறைந்த நற்பலன்கள் கிடைக்கும் நாள். வெற்றியை அடைய முயற்சி செய்யுங்கள். உங்கள் பணிகளில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். செலவுகள் அதிகமாகக் காணப்படும். அதனால் முடிந்தவரை சேமிக்க பழகுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.