Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 02.10.2023

Advertisements

இன்றைய ராசிப்பலன் – 02.10.2023

 

இன்றைய பஞ்சாங்கம்

02-10-2023, புரட்டாசி 15, திங்கட்கிழமை, திரிதியை திதி காலை 07.37 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. பரணி நட்சத்திரம் மாலை 06.24 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் மாலை 06.24 வரை பின்பு மரணயோகம். சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷம்


இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

ரிஷபம்


இன்று உங்களுக்கு வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். வியாபார ரீதியான பிரச்சினைகளைச் சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்


இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார தொடர்பு ஏற்படும். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்


இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தைத் தரும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம்


இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படக்கூடும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்கலாம். உறவினர்கள்மூலம் உதவி கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்புத் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

கன்னி


இன்று உங்கள் உழைப்பிற்கு ஏற்றப் பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

துலாம்


இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள்மூலம் சுபசெய்திகள் வரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிகம்


இன்று உங்களின் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன்- மனைவியிடையே மன ஸ்தாபங்கள் மறைந்து சந்தோஷம் கூடும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வருமானம் பெருகும். சுபகாரிய முயற்சிகளில் அ-னுகூலம் கிட்டும்.

தனுசு


இன்று பிள்ளைகள்மூலம் வீண் செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனகசப்பு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினை குறையும்.

மகரம்


இன்று உங்களுக்குச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அரசுமூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்குப் படிப்பில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் கிட்டும்.

கும்பம்


இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

மீனம்


இன்று நீங்கள் சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *