Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 12.10.2023

Advertisements

இன்றைய ராசிப்பலன் – 12.10.2023

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

இன்றைய பஞ்சாங்கம்

12-10-2023, புரட்டாசி 25, வியாழக்கிழமை, திரியோதசி திதி இரவு 07.54 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. பூரம் நட்சத்திரம் பகல் 11.36 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பகல் 11.36 வரை பின்பு மரணயோகம். மாத சிவராத்திரி. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷம்


இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்


இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் அசதி சோர்வு உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் கூட்டாளிகளின் உதவியால் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்.

மிதுனம்


இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலப் பலன் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்


இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உடல்நிலையில் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும்.

சிம்மம்


இன்று உங்களுக்குப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கி லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலையில் பணிச்சுமை குறையும்.

கன்னி


இன்று உங்களுக்குப் பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப்பலன் உண்டாகும். எதிர்பாராத உதவியால் மனமகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்


இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பிள்ளைகள்மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

விருச்சிகம்


இன்று நீங்கள் எந்தக் காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். பயணங்கள்மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலம் கிட்டும். வருமானம் இரட்டிப்பாகும்.

தனுசு


இன்று நீங்கள் செய்ய நினைக்கும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனவருத்தங்கள் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மகரம்


இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

கும்பம்


இன்று நீங்கள் எந்தச் செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்


இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *