Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 26.09.2023

Advertisements

இன்றைய ராசிப்பலன் – 26.09.2023

 

இன்றைய பஞ்சாங்கம்

26-09-2023, புரட்டாசி 09, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பின்இரவு 01.46 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. திருவோணம் நட்சத்திரம் காலை 09.41 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். தனிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷம்


இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். சேமிப்பு உயரும்.

ரிஷபம்


இன்று நீங்கள் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மனஸ்தாபங்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிட்டும். உற்றார் உறவினர்களின் உதவியால் பொருளாதார ரீதியான நெருக்கடிகள் ஓரளவு குறையும்.

மிதுனம்


இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரம் சம்பந்தமான புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது உத்தமம். முடிந்த வரை பேச்சைக் குறைப்பது நல்லது.

கடகம்


இன்று உங்களுக்குக் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உறவினர்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபமுயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்


இன்று தொழில் வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

கன்னி


இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையைக் கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன்கள் குறையும்.

துலாம்


இன்று தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்ககூடும். பிள்ளைகள் வகையில் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். எதிர்பாராத உதவியால் கடன்கள் விலகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்


இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். திடீரென்று வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு உத்தியோகத்தில் நல்ல மாற்றம் நிகழும்.

தனுசு


இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளைச் சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்துச் சென்றால் பிரச்சினைகளைச் சமாளிக்கலாம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

மகரம்


இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான காரியத்தைக் கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. உங்களின் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்


இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

மீனம்


இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *