
ஆசிரியரின் காதல் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாணவனைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்த 34 வயது ஆசிரியை.
சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர் மேரி கே லெட்டோர்னோ. உலகின் மிக மோசமான ஆசிரியை என்ற பட்டத்தைப் பலர் மேரிக்கு வழங்கியுள்ளனர். அதற்குக் காரணம் மேரி தனது பன்னிரண்டு வயது மாணவனைத் திருமணம் செய்து கொண்டது தான். இவ்வாறு பொறுப்புமிக்க பணியைச் செய்யும் ஆசிரியர் ஒருவர் குறித்து இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவில் வசிக்கும் விஜி ஃபுலாவ் என்பவர் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, அவரது பெண் ஆசிரியரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானார். அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஆசிரியை அதே மாணவனைத் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தது தான்.
மேரி வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார் விஜி. இந்நிலையில் மேரிக்கு விஜி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் அந்த மாணவனுடன் உடல் ரீதியிலான உறவை ஏற்படுத்திக் கொண்டார் மேரி. அப்போது மேரிக்கு 34 வயது.

மேலும், அவர் ஏற்கனவே நான்கு குழந்தைகளுக்குத் தாயாக இருந்தார். இந்த விபரம் வெளிச்சத்திற்கு வந்ததும், மேரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் சிறையிலிருந்து வெளியே வந்தபிறகும், விஜியுடனான உறவை மேரி தொடர்ந்துள்ளார். இந்த உறவின் மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார் மேரி.
விஜிக்கும் மேரிக்கும் 2005ல் திருமணம் நடந்தது. இருவரும் பதினான்கு ஆண்டுகளாகத் தம்பதியாக வாழ்ந்தனர். பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டனர். இல்லற் வாழ்க்கையிலிருந்து விலகியபிறகும், இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டும் புற்றுநோயால் மேரி உயிரிழந்தார்.
அவர்களது உறவுகுறித்து விஜி கூறுகையில், மேரிக்கு முதலில் முத்தம் கொடுத்தது தான் என்றும், இருவரும் ஒருவரையொருவர் காதலித்தாலும் தனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில், மேரி தனது வாழ்க்கையில் எடுத்த சில முடிவுகளுக்காக வருந்தியதாகக் கூறினார்.

