குறைந்த விலைகளில் கேரளத்துக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் தவெக அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 41 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை 14 ரூபாய், 12 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை எனச் சர்ச்சையாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் நாள்தோறும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 8 ரூபாய் 65 காசுகளுக்கு வழங்குவதற்குக் கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அப்பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். கேரளத்துக்கு 12 ரூபாயிலும் 14 ரூபாயிலும் ஒரு யூனிட் மின்சாரம் கிடைக்குமென்றால் தவெக அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது? என்று வினவியுள்ளார். எனவே இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது? யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? என விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

