மின்வாகன சார்ஜிங் கட்டணம் குறையுமா…நிதின் கட்கரி பரிந்துரை!

மின்வாகனங்களைச் சார்ஜ் செய்வதற்கு ஓர் அலகுக்குப் பகலில் 5 ரூபாயும், இரவில் 3 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கும்படி மத்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரைத்துள்ளார்.

தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்தியச் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது, மின்சார வாகனங்களுக்குச் சார்ஜ் ஏற்றுவதற்காக இப்போது வெவ்வேறு கட்டணங்கள் வாங்கப்படுவதாகக் குறிப்பிட்டார். பகல் நேரத்தில் ஓர் அலகுக்கு 5 ரூபாயும், இரவு நேரத்தில் ஓர் அலகுக்கு மூன்று ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கும்படி மகாராஷ்டிர முதலமைச்சரிடம் தான் பரிந்துரைத்துள்ளதாகக் கூறினார்.

ஓர் அலகு மின்சாரத்தில் மின் வாகனங்கள் 5 கிலோமீட்டர் செல்வதாகவும், இதனால் ஓர் அலகு 3 ரூபாய் என்கிற கட்டணத்தில் 600 ரூபாய் செலவில் ஆயிரம் கிலோமீட்டர் பயணிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மின்சார வாகனங்களின் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அடுத்த ஆண்டில் 35 விழுக்காடு முதல் 40 விழுக்காட்டினர் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவர் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *