
மேஷம் ராசிக்காரர்களுக்கு எந்தச் செயலையும் பொறுமையாகச் செய்ய வேண்டும். பணியிடம் உங்களுக்குச் சிறப்பாக இருக்காது. துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அவ்வப்போது பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்.பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அவ்வப்போது பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்படும்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு கஷ்டப்படுவீர்கள். துணையிடம் மகிழ்ச்சியாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்குமுக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான பலனைப் பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.துணையிடம் பேசும்போது அமைதியாகப் பேச வேண்டும். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் முதுகு வலி பிரச்சனை ஏற்படும்.
கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். துணையிடம் பதற்ற நிலையைத் தவிர்க்க வேண்டும். உங்களின் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. பணியிடத்தில் பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பணிகளைத் திட்டமிட்டு பணியாற்றுவது அவசியமானது. பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் தொண்டை வலி மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும். துணையிடம் நட்பான அணுகுமுறை தேவை. ஏனென்றால் அப்போது தான் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியும். பணவரவு திருப்தியாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். துணையிடம் நட்பாக நடந்து கொள்வீர்கள், இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணியிடத்தில் உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். வரவுச் செலவு இரண்டும் கலந்து காணப்படும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு மந்தமாகக் காணப்படுவீர்கள். பணியிடத்தில் உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்காது. இதனால் கவலை அடைவீர்கள். துணையிடம் நல்லுறவை பராமரிக்க நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் கண்களில் எரிச்சல் பிரச்சனை ஏற்படும்.
மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணியிடத்தில் உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் உணர்வுகளைத் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். பணியிடத்தில் சக பணியாளர்களிடம் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். துணையிடம் உங்களின் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் பதிவு உயர்வும் மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். துணையிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள். உங்களின் சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்தக் கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளைச் சந்திப்போம் நன்றி வணக்கம்.