Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 20.10.2023

Advertisements

இன்றைய ராசிப்பலன் – 20.10.2023

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

இன்றைய பஞ்சாங்கம்

20-10-2023, ஐப்பசி 03, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி இரவு 11.25 வரை பின்பு வளர்பிறை சப்தமி. மூலம் நட்சத்திரம் இரவு 08.41 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் இரவு 08.41 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

 

மேஷம்


இன்று உங்களுக்குப் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.

ரிஷபம்


இன்று உங்களுக்குத் தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.

மிதுனம்


இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கடகம்


இன்று உங்களுக்குப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழில் வியாபார ரீதியாக உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும்.

சிம்மம்


இன்று உங்களுக்குப் பணவரவு சற்று சுமாரா£க இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் இழுபறி நிலை உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் ஏற்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

கன்னி


இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாகச் செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இருந்த இடையூறுகள் விலகும்.

துலாம்


இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையைப் பூர்த்தி செய்வார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் குறையும்.

விருச்சிகம்


இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் கையிருப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். வேலைபளு குறையும். கடன் பிரச்சினைகள் விலகும்.

தனுசு


இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாகச் செயல்படுவார்கள்.

மகரம்


இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

கும்பம்


இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியைத் தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.

மீனம்


இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *