இது மட்டும் தான் திமுக அரசின் வாடிக்கை – வானதி சீனிவாசன்.!

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தும்போது மின்வெட்டை ஏற்படுத்துவது திமுக அரசின் வாடிக்கை என்று பாஜக மகளிரணித் தலைவி வானதி தெரிவித்துள்ளார். கோவை கணபதியில் 1500 பெண்களைத் தொழில் முனைவோராக்கும் “மோடியின் தொழில் மகள்” நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோசி, பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிரணித் தலைவர் வானதி, முன்னாள் ஆளுநர் தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாகேந்திரன், விஜய் செல்லும் இடங்களில் மின்தடை ஏற்படுத்துவது சரியானது அல்ல எனவும், அதே வேளையில் விஜய் தன்னை எல்லோரோடும் ஒப்பிட்டுக் கொள்வதும் சரியானது அல்ல என்று தெரிவித்தார்.

அதன் பின் பேசிய பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தும்போது மின்வெட்டை ஏற்படுத்துவது திமுக அரசின் வாடிக்கை எனத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை ஆகியோர் பேசிய கூட்டங்களிலும் இதுபோல் மின்வெட்டு நிகழ்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *