Madurai Rowdy Murder: நான்குபேரை போலீசார் பிடித்து விசாரணை!

Advertisements

ரவுடியை வெட்டிச் சாய்த்த கும்பல்!

மதுரை அருகே ரவுடியை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த நான்குபேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

குள்ளனம்பட்டி: மதுரை மாவட்டம் பரவையை சேர்ந்தவர் கவுதம்(38). இவர்மீது மதுரை மாவட்டத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில நாட்களாக இவர் திண்டுக்கல் என்.எஸ்.நகர் பகுதியில் வசித்து வந்தார்.

திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திலும் இவர்மீது கொலை முயற்சி வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்றிரவு பாரதிபுரம் பழைய வேலைவாய்ப்பு அலுவலகம் பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்யும் இடத்திற்கு சென்று மதுபானங்கள் வாங்கி குடித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பலுக்கும், கவுதமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் கவுதமை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.


இன்று காலைக் கவுதம் ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் நகர்தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

இவர்மீது ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதால் பழிக்குப்பழியாக இவரை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகமடைந்துள்ளனர். மேலும் மதுரையிலிருந்து எதற்காகக் கவுதம் திண்டுக்கல் வந்தார், வேறு யாரையாவது கொலை செய்யத் திட்டம் தீட்டி இருந்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கவுதமின் உடலைக் கைப்பற்றித் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் 4 பேரைப் பிடித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் நகரில் பழிக்குப்பழியாகக் கொலை தொடர்வதால் பொதுமக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *