Rice flour: அழகு ரகசியம்!

Advertisements

அரிசி மாவு அழகு ரகசியம்!

அரிசியை கொண்டு அழகுபடுத்தி கொள்ளலாம் என்பது வீட்டிலிருந்து அழகு படுத்தி கொள்ள நினைப்பவர்களுக்கு ஓர் வரபிரசாதம். இயற்கை மருத்துவம், இயற்கை அழகு என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பொருள்களைக் கொண்டு பராமரிக்கவே விரும்புவார்கள்.
இதற்கு முன்பே அரிசி கழுவிய நீர் குறித்து பார்த்திருக்கிறோம். அதே போன்று அரிசி மாவும் சருமத்துக்கும் பலவிதமான நன்மைகளைத் தருகிறது. எந்தெந்த சரும பிரச்சனைகளுக்கு எப்படியெல்லாம் எதனுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 3 டீஸ்பூன்
காய்ச்சாத பால் / பன்னீர் – 3 டீஸ்பூன்
தயிர் – 3 டீஸ்பூன்

அனைத்தையும் சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்தில் பேக் போடவும். முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி இலேசாக மசாஜ் செய்து விடவும். அப்படியே உலரவிடவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

பலன்:

முகத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றும். அழுக்குகளை அகற்றும். முகத்தின் மங்கிய நிறத்தை மாற்றும். வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் முகத்தின் நிறம் அதிசயத் தக்க அளவில் பளிச்சென்று இருக்கும்.

சருமத்தில் கொப்புளங்கள், உஷ்ணக்கட்டிகள், கோடையில் வியர்க்குரு, சிவப்பு, அரிப்பு தடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்.

அரிசி கழுவிய நீர் அல்லது அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஐஸ்க்யூப்களில் ஊற்றி வைக்கவும். அவை ஐஸ்கட்டிகளாக உறைந்ததும் அதைக் கொண்டு சருமத்தில் முகம் முழுக்க எங்கெல்லாம் அரிப்பு பிரச்சனை உள்ளதோ அங்கெல்லாம் ஒத்தடம் கொடுக்கவும். தினமும் 15 நிமிடங்கள்வரை இப்படி செய்து வந்தால் சரும அழற்சி நீங்கும்.


அரிசி மாவு முகத்தில் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்க உதவிடும். முகத்தில் இறந்த செல்கள் தங்கிவிடுவதால் முகப்பருக்கள் வருகிறது அவ்வப்போது அதை வெளியேற்ற வேண்டும். இரண்டு முறை செய்தபிறகு கிடைக்கும் பொலிவை ஒருமுறை அரிசி மாவு பயன்படுத்தினாலே கிடைத்துவிடும்.

அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து உருட்டி முகத்தில் இலேசாக மசாஜ் செய்யவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மூக்கு நுனிகள் கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் சற்று அழுத்தமாக ஸ்கரப் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். பிறகு ஐஸ்கட்டிகள்கொண்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். முதல்முறை செய்யும் போதே முகத்தில் பளிச் பார்க்கலாம்.

விழாக்களுக்குச் செல்லும்போது அதிக மேக் அப்பயன்படுத்துபவர்கள் ஆக இருக்கட்டும், சாதாரணமாக மேக் அப்பயன்படுத்துபவர்களாக இருக்கட்டும் இரவு தூங்கும்போது மேக் அப்கலைத்த பிறகு படுக்க வேண்டும். இல்லையெனில் அதில் இருக்கும் இரசாயனங்கள் சருமத்தில் பாதிப்பை உண்டாக்கும்.

மேக் அப்கலைப்பதற்கு அதிக நேரம் பிடிக்கிறது என்பவர்கள் எளிதாக முகத்தைச் சுத்தம் செய்ய அரிசி மாவு பயன்படுத்தலாம். அரிசிமாவை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி இலேசாக ஐந்து நிமிடங்கள் தேய்த்து கழுவிய பிறகு முகத்தைப் பார்த்தால் மேக் அப்முழுவதும் நீங்கி முகம் பளிச்சென்று மின்னும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *