TN Assembly Special Session: அதிமுக வெளிநடப்பு!

Advertisements

ஜெயலலிதா பெயரில் இருந்த மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றிச் சட்ட முன்வடிவு கொண்டுவந்ததை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

சென்னை: கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காகத் தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.இந்த நிலையில், சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

ஜெயலலிதா பெயரில் இருந்த மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றிச் சட்ட முன்வடிவு கொண்டுவந்ததை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எட்டப்பாடிபழனிச்சாமி தலைமையில்அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *