டிஎன்பிஎல் கிரிக்கெட் – சேலம் அணியை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அபார வெற்றி!

டி.என்.பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 11ஆவது போட்டியில் சேலம் ஸ்பாட்டன்ஸ் அணியை மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள மைதானத்தில் டி.என்.பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 11ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சேலம் ஸ்பாட்டன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது.
இதில், சிறப்பாக விளையாடிய சித்தார்த் மகாதேவன் 60 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *