அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை – சென்னையில் சவரனுக்கு ரூ.1,600 சரிவு!

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு, 200 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 815 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் குறைந்து, ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 11 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 இலட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *