ட்ரம்ப்புக்கு மரண அச்சுறுத்தல்.! ரகசியமாக உயிர் தப்பிய அதிபர்.!

Advertisements

சர்வதேச அரசியலில் இப்போது பரபரப்பைக் கூட்டிக் கொண்டிருக்கும் மூன்று முக்கியமான உலகச் செய்திகளைப் பத்தித்தான் இந்த வீடியோவில் பார்க்கப் போறோம். முதலாவதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரானிடமிருந்து வந்த கொலை மிரட்டல், இரண்டாவது, ஆப்பிரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது விபத்துக்குள்ளானதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவின் அதிநவீன உளவு டிரோன், மூன்றாவது, அரபு உலகத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் இது பற்றிய தகவல்கள் குறித்து தான் தற்பொழுது விரிவாக பாக்கப் போறோம்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு ஈரான் தரப்பிலிருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிற விஷயம் இப்போ உலக நாடுகளை அதிர வச்சிருக்கு. துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்குப் பிறகு, வழக்கமான பெரிய விமானத்தில் வராம மிகவும் ரகசியமான முறையில் ஒரு சிறிய விமானத்தில் ட்ரம்ப் தப்பியிருக்கிறார்.

துருக்கி மாநாடு முடிஞ்சதும், வழக்கம் போல அமெரிக்க அதிபர்கள் பயணிக்கிற ‘Air Force One’ விமானத்தில்தான் ட்ரம்ப் திரும்புவார் அப்படின்னு ஊடகங்களும், சில வெள்ளை மாளிகை அதிகாரிகளும்கூட உறுதியா நம்பினாங்க. ஆனா, பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அங்கே ஒரு மாஸ்டர் பிளான் போடப்பட்டது. கத்தார் நாடு வழங்கிய புதிய அதிநவீன ‘Air Force One’ விமானம் மாநாட்டில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், ஈரான் அச்சுறுத்தல் காரணமாக அதைப் பயன்படுத்தாமல் மிகவும் பாதுகாப்பான இன்னொரு திட்டம் தீட்டப்பட்டது.

அதன்படி, விமான நிலையத்தில் இருந்த கேட்டரிங் லொறி மூலமாக யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராத வகையில ட்ரம்ப் மறைமுகமாக ஒரு சிறிய ‘Air Force C-32A’ விமானத்திற்கு மாற்றப்பட்டார். அதுமட்டுமில்லாம, ஊடகங்களைச் சேர்ந்தவர்களை ஏமாற்றும் விதமாக, “உங்கள் விமான ஜன்னல் திரைகளை மூடிக்கொள்ளுங்கள்”னு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால, உண்மையான விமானத்தில் ட்ரம்ப் செல்வதை யாராலுமே கண்டுபிடிக்க முடியல.

கடைசியில, ட்ரம்ப் பயணித்த அந்த சிறிய ரகசிய விமானம் பத்திரமாகப் பிரித்தானியாவில் இரவு 10:20 மணிக்குத் தரையிறங்கியது. அதுக்குச் சில நிமிடங்களுக்குப் பிறகே, ஊடகங்களை ஏற்றிச் சென்ற பழைய ‘Air Force One’ விமானம் அங்கே வந்து இறங்கியது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்கனவே உச்சக்கட்டப் பதற்றம் நிலவி வரும் சூழலில், வெள்ளை மாளிகை செய்துள்ள இந்த அதிரடி மற்றும் ரகசிய பாதுகாப்பு நடவடிக்கை உலக அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும், அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை உலுக்கியுள்ள அடுத்த முக்கியமான செய்தி, ஆப்பிரிக்காவில் நடந்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் உள்ள சாபெல்லி அமெரிக்க விமானப் படைத்தளத்திற்கு அருகே, அமெரிக்காவின் அதிநவீன ‘MQ-9A ரீப்பர்’ டிரோன் ஒன்று திடீரெனக் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஜிபூட்டி நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள இந்தச் சாபெல்லி விமானத் தளம், ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமெரிக்க ராணுவத்தின் மிக முக்கியமான உளவு மையமாகக் செயல்பட்டு வருது. தெற்கு செங்கடல் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைக் கண்காணிக்க அமெரிக்கா இந்த ‘ரீப்பர்’ டிரோன்களைத்தான் தீவிரமாகப் பயன்படுத்தி வருது. இந்தச் சூழலில்தான், தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த டிரோன் விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபட்டுக்கான பின்னணியில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருக்கலாமோ என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் அமெரிக்காவின் பல ‘ரீப்பர்’ டிரோன்களை ஹவுதிகள் ஏவுகணை வீசிச் சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்பதும், செங்கடலில் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, பாப் எல் மண்டேப் ஜலசந்தி பகுதியில் பறந்து கொண்டிருந்தபோதுதான் இந்த டிரோனின் சிக்னல் மற்றும் தொடர்பு திடீரெனத் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால், இது எதிரிகளின் தாக்குதலா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து அமெரிக்க ராணுவம் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. எனினும், இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக . சர்வதேச அரசியலில் அடுத்ததாக மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிகழ்வு அரபு உலகத்தில் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்’ சமீபத்தில் கையெழுத்தானது.

இஸ்லாத்தின் மிகப் புனிதமான நகரமான மெக்காவில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீதான தாக்குதல் என்பது, தங்களின் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது சர்வதேச அளவில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், இந்த ஒப்பந்தம் எதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டுப் பிரதமர் முகமது ஷாபாஸ் ஷெரீப் விளக்கமளித்துள்ளார்.

அவர் பேசுகையில், “இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் எந்தவொரு ஆக்கிரமிப்பு நோக்கமும் கொண்டது அல்ல; இது முழுக்க முழுக்க தற்காப்பு சார்ந்தது மட்டுமே” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் மட்டுமே இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்றும், பல வருட இராஜதந்திர முயற்சிகளுக்குப் பிறகே இந்த வரலாற்று ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தத்தை “முஸ்லிம் உம்மாவின் வலிமையான ஆதாரம்” என்றும் ஷாபாஸ் ஷெரீப் வர்ணித்துள்ளார்.

உலக அரசியலில் அடுத்தடுத்து நடந்துவரும் இந்த அதிரடி நிகழ்வுகள் எந்த மாதிரியான திருப்பங்களை ஏற்படுத்தப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *