
துபாயில் நடந்த ஐ.பி.எல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரான் கிரீன் 25.20 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ஐ.பி.எல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் இவர் ஆவார்.
முன்னதாக, மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு ஏலம் போயிருந்தார். ஆனாலும், ஐ.பி.எல் விதிகளின்படி கேமரான் கிரீனுக்கு 18 கோடி மட்டுமே சம்பளமாக வழங்கப்படும்.
அதாவது, ஒரு வெளிநாட்டு வீரரின் அதிபட்ச சம்பளம் இவ்வளவுதான். எனவே, 18 கோடி போக மீதி தொகை பி.சி.சி.ஐ வீரர்கள் மேம்பாட்டு நல நிதிக்கு சென்று விடும். தற்போது, 25 வயதான கேமரான் கிரீன் மும்பை மற்றும் பெங்களுரு அணிக்ளுக்காக விளையாடியுள்ளார். 29 ஆட்டங்களில் விளையாடி 707 ரன்கள் எடுத்துள்ளார். 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இந்த ஏலத்தில் சென்னை அணி கேமரான் கிரீனை ஏலம் எடுக்க கடைசி வரை போராடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.



