‘அன்பே டயானா’ ஓ.டி.டி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Advertisements

அன்பே டயானா’ திரைப்படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டு தேதியை  படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பே டயானா’. இப்படத்திற்கு பாரி இளவழகன் கதை மற்றும் திரைக்கதை எழுதியதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதுடன், வசூலிலும் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி இப்படம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *