கிரீஸ் நாட்டில், பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறனுக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சிஇஓ-வுமான காவியா மாறன் ஆகியோரின் திருமணம் கிரீஸில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, நவம்பர் .21 ஆம் தேதி சென்னையில் வரவேற்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலை தளப் பதிவில், ‘வாழ்நாளின் ஒரே வரம், தன் வாழ்நாள் முழுமைக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

