ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் லக்சயா சென் வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
குமாமோட்டோ நகரில் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், சீன தைபேயின் சீ யூ ஜென் உடன் மோதினார். இதில் சிறப்பாக விளையாடிய லக்சயா சென் 21-19, 21-18 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்கு முன்னேறினார்.


