6 முறை சாம்பியனான அலிசா ஹீலி Unsold

மகளிர் பிரீமியர் லீக் ஏலம் இன்று நடைபெறுகிறது .

5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது.

ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர்நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்டு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோர் அதிக விலை போவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே அடிப்படை விலை ரூ. 50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட தீப்தி சர்மாவை ரூ. 3.20 கோடிக்கு உபி வாரியர்ஸ் வாங்கியது. சோபி எக்லெஸ்டோனை ரூ. 85 லட்சத்திற்கு உபி வாரியர்ஸ் வாங்கியது. மெக் லானிங்கை ரூ. 1.9 கோடிக்கு உபி வாரியர்ஸ் அணியே வாங்கியுள்ளது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான அலிசா ஹீலியை யாரும் ஏலத்தில் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் அடிப்படை விலை ரூ. 50 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்ட அவர் ஏலத்தில் விலை போகவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *