TNPL 2024 : 8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் 16-வது லீக்கில் திருப்பூர் தமிழன்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சை சந்தித்தது. போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த திருப்பூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 13 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்தது. பின்னர் ஆடிய திண்டுக்கல் அணி 11.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



