ஹிட்லர் முகமாக முதலமைச்சர் விஜய்யும், அவரின் அமைச்சர்களும் ஆணவப் போக்குடன் பொய்யை மட்டுமே பேசி வருகிறார்கள் என்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் விஜய்யின் ஆணவப் பேச்சைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு முதலமைச்சர் விஜய்க்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹிட்லர் முகமாக முதலமைச்சர் விஜய்யும், அவரின் அமைச்சர்களும் ஆணவப் போக்குடன் பொய்யை மட்டுமே பேசி வருகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற பாசிசப் போக்கை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதிகாரத்திற்குக் கட்டுப்பட மாட்டேன்’ எனச் சொல்லி சிறைக்குச் சென்ற கழகத் தலைவரைப் பற்றி, ‘தனது படத்தை ரிலீஸ் செய்ய விடுங்கள்’ என கொடநாடு சென்று கெஞ்சியவர் பேசுவதற்கு துளியும் தகுதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அதிகாரத்திற்கு எதிராக எழுச்சியுடன் திரளும் கழக உடன்பிறப்புகளுடன் இணைந்து முதலமைச்சரின் ஆணவப் பேச்சைத் தொடர்ந்து கண்டிப்போம் என்று தெரிவித்துள்ளார். உங்களின் போலி விவரிப்பு பொய்கள் ஊர் சுற்ற அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.


