மதுரை தத்தனேரி மின் மயானத்தில் பட்டிமன்ற நடுவரும் தமிழ் அறிஞருமான சாலமன் பாப்பையாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
பட்டிமன்ற நடுவராக மக்கள் மனங்களை வென்றவர் சாலமன் பாப்பையா. இவர், கல்லூரி பேராசிரியராகவும், தமிழ் அறிஞராகவும் விளங்கியர். 90 வயதான சாலமன் பாப்பையா வயது முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
இதனை தொடர்ந்து, பொதுமக்களின் அஞ்சலிக்காக சாலமன் பாப்பையா உடல் ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. இதையடுத்து, சாலமன் பாப்பையாவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிசடங்கு நடைபெற்றது. இதில், தமிழக அமைச்சர்கள் நிர்மல் குமார், விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர், மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.



