தமிழர்களை இழிவு படுத்துவது போல திருமாவளவன் பேசுவதாக நாகேந்திரன் விமர்சனம்.!

Advertisements

அரசியல் ஆதாயத்துக்காகத் தமிழ் மன்னர்களைத் திருமாவளவன் இழிவுபடுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழக பாஜக தலைவர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ் அழிவதற்கும் தமிழ்ப் பண்பாடு அழிவதற்கும் காரணம் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடல் கடந்து சென்று ஸ்ரீவிஜயத்தையும் கங்கையையும் தமிழரின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து தமிழ்ப் பண்பாட்டை நிலைநாட்டிய தமிழ் மன்னர்களைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் போலச் சித்தரிப்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் சோழப் பேரரசர் இராஜராஜனுக்கும், மாமன்னர் இராஜேந்திரனுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிலையெழுப்பி, அவர்களது புகழை மேன்மேலும் பரவச் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம் இண்டி கூட்டணியினரோ அம்மாமன்னர்களைத் தமிழின எதிரிகளைப் போலச் சித்தரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சீட்டு கணக்குகளுக்காகப் பழம்பெருமை மிக்க மன்னர்களின் புகழைக் கெடுத்து அரசியல் ஆதாயம் தேட முயலும் கொடிய முயற்சியைத் திருமாவளவன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *