
கர்நாடகாவில் நல்ல மழை பெய்வதால் தமிழகத்துடனான காவிரி பிரச்சினை சீரடையும் என்று துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூருவில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்துடனான காவிரி பிரச்சினை சீரடையும் என்றும், தினமும் 1 டி.எம்.சி.க்கு அதிகமாகவே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.




