
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 26-ஆவது டி.என்.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் 26-ஆவது டி.என்.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில், திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் படி முதலில் விளையாடிய திருச்சி அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.
இதில், அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 54 ரன்களும், ஷியாம் சுந்தர் 52 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சு தரப்பில் சென்னை அணியின் சிலம்பரசன் 3 விக்கெட்களையும், சுவப்நில் சிங் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
பந்து வீச்சு தரப்பில் ஈஸ்வரன் 2 விக்கெட்களையும், டேவிட்சன், அந்தோனி தாஸ், சஞ்சய் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தி திருச்சி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம், திருச்சி அணி இத்தொடரில் 5 வெற்றிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



