உக்ரைன் மீது ரஷ்யா வஞ்சகத் தாக்குதல் : ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு.!

Advertisements

ரஷ்யா முற்றிலும் வஞ்சகமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைனில் கிரிவி ரிஹில் உள்ள ஒரு வணிக வளாகம் மீது இரண்டு ரஷ்ய ஆளில்லா விமானங்கள் தாக்கியதில் 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சொந்த ஊரில் பகல் நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்களில் 22 குழந்தைகளும் அடங்குவர் என்று ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, இந்த தாக்குதல் “முற்றிலும் வஞ்சகமானதும் இழிவானதும்” என்றும் குறிப்பிட்டார். ஒரு திட்டமிட்ட முயற்சியாக  ரஷ்ய ஆளில்லா விமானம் அந்த வணிக வளாகத்தை தாக்கியுள்ளதாகத் தெரிவத்தார். இதுபோன்ற தாக்குதல்கள் பயங்கரவாத செயல்களுக்கு சற்றும் குறைவானவை அல்ல, என்றும் கூறினார்.

இந்த தாக்குதலை ரஷ்யாவை பொறுப்பேற்க செய்யுமாறு உலகை வலியுறுத்தினார். ரஷ்யா உக்ரைன் மீதான தனது வான்வழி போரை தீவிரப்படுத்தி வரும் நிலையில் உக்ரைனும் ரஷ்யா மீதான தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, எண்ணெய் தளவாட உள்கட்டமைப்புகளைக் குறிவைத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *