
கடும் நெருக்கடியிலும் ரூ.100 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். நாள்தோறும் 15 கோடி லிட்டர் நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வடசென்னையில் 10 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்”என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ரூ.1,802 கோடி மதிப்பீட்டில் 39 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நெம்மேலி: செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலை, நெம்மேலியில் ரூ.2,465 கோடி மதிப்பீட்டில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த ஆலையின் மூலம் சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் உள்ள 9 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். தினமும் 15 கோடி லிட்டர் நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 95 முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ.1,802 கோடி மதிப்பீட்டில் 39 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
நெம்மேலியில் ரூ.2,465 கோடியில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தைத் திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ நான் முதன்முதலில் கவனித்த துறை உள்ளாட்சித் துறை. மாநகராட்சிகள், நகராட்சிகள் நடைபெற்ற பணிகளைப் பட்டியலிட ஒருநாள் போதாது.
2010;ல் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடும் நெருக்கடியிலும் ரூ.100 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். நாள்தோறும் 15 கோடி லிட்டர் நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வடசென்னையில் 10 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்” எனத் தெரிவித்தார்.




