Petrol Bomb Attack: திருமண நிகழ்ச்சியில் இருதரப்பினரிடையே மோதல்.. பெட்ரோல் குண்டு வீச்சு!

Advertisements

சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் சவுண்ட் சர்வீஸ் கடைமீது பெட்ரோல் குண்டு வீசபட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் கைதுசெய்தனர்.

சென்னை நொளம்பூர் வேணுகோபால் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார், உறவினர்கள், நன்பர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். அப்போது நண்பர்கள் சிலர் ஒன்றாக மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதால் ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.‌

இதில் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் அதே பகுதியில் உள்ள டெரி என்கிற சபரி தாசன் என்பவருக்குச் சொந்தமான சவுண்ட் சர்வீஸ் கடைமீது பெட்ரோல் குண்டு வீச்சி  தப்பிச் சென்றது. இதில் சவுண்ட் சர்வீஸ் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமாயின.

இது தொடர்பாக நொலம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட அசோக் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய சரித்திர பதிவேடு குற்றவாளியான தனுஷ் உள்ளிட்ட சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய கடையின் உரிமையாளர் சபரி தாசன், கஞ்சா போதையில் தெருக்களில் கத்தி வைத்துத் தேய்த்து சென்று மக்களை அச்சுறுத்தியதாகவும், அக்கம்பக்கத்தினர் அழைத்துக் கேட்டதால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற இளைஞர்கள் நள்ளிரவு நேரத்தில் தனது கடை வளாகத்தில் பெட்ரோல் குண்டு விசினர். இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு உள்ளதாகவும், இந்த் சம்பவத்தில் தொடர்புடையவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அந்த் பகுதியில் உரிய பாதுகாப்பு அளிக்கவும் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *