Russia – Ukraine War: ரஷியா மீது மீண்டும் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா!

Advertisements

உக்ரைன் போர்-நவால்னி மரணம் விவகாரத்தில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷியாவை சேர்ந்த நிறுவனங்கள் தனி நபர்கள் உள்பட 500 இலக்குகள்மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தது.

இதற்கிடையே ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்ததற்கு ரஷிய அதிபர் புதின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்தது. மேலும் நவால்னி மனைவியை அமெரிக்க அதிபர் ஜோபைடன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது நவால்னியின் மறைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியாவின் பொருளாதாரம், தொழில் துறையைப் பாதிக்கும் வகையில் பல புதிய தடைகள் விதிக்கப்படும் என்று ஜோபைடன் தெரிவித்தார்.

இந்த நிலையில் உக்ரைன் போர்-நவால்னி மரணம் விவகாரத்தில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷியாவை சேர்ந்த நிறுவனங்கள் தனி நபர்கள் உள்பட 500 இலக்குகள்மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது போர் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் அதிகளவில் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும்போது, நாவல்னியின் சிறை வாசத்துடன் தொடர்புடைய நபர்கள், ரஷியாவின் நிதித் துறை, பாதுகாப்பு, தொழில் துறை, உள்ளிட்டவை மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. ரஷியாவின் போருக்கு ஆதரவாக உள்ள 100 நிறுவனங்களுக்குப் புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கிறோம் என்றார்.

இதேபோல் சீனா உள்ளிட்ட சில நாடுகள்மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கிடையே ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ரஷிய அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது.

நவால்னி உடலைப் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கக் கூடாது. உடல் அடக்கத்தினை ரகசியமாக நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *