TN Assembly: சட்டசபை கூட்டத்தொடர் இன்று இரண்டாம் நாள் தொடங்கியது..!

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று இரண்டாம் நாள் தொடங்கியது

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் 2023-24ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆதரவுடன் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டுக்கு நீர் திறக்கக் கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சபைக் கூட்டம் 5 நாட்கள் நடைபெறலாம் என்று கூறப்படும் நிலையில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *