Gang rape: கூட்டு பாலியல் வன்கொடுமை அசாமில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மாநிலத்தில் குற்ற விகிதங்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக அறிவித்த ஒரு நாள் கழித்து, குவஹாத்தியில் ஒரு சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவம் பிருபாரி பகுதியில் நடந்துள்ளது, இதில் இரண்டு பேர் குற்றம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவன் சிறுவன் என்றும்  தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி  ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.  வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் 16 வயது நிரம்பிய சிறுவன் மற்றொருவன் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டருகே வாடகை வீட்டில் குடியிருந்தவர் என்பதும்  தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது ரூப்நகரிலுள்ள கல்யாணி நிவாஸ் குழந்தைகள் காப்பகத்தில்  தங்க  வைக்கப்பட்டு சிகிச்சை மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தான் அசாம் மாநில முதல்வர்  பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளது கூறியிருந்த நிலையில்,  இப்படியொரு அதிர்ச்சியான  சம்பவம்  நிகழ்ந்துள்ளது. 2019 -ஆம் ஆண்டில் 1235ஆக இருந்த எண்ணிக்கை 2023-ல்  686 ஆக குறைந்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்து இருந்தார். பெருமையைக் குலைக்கும் விதமாக இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *