நீட் வினாத்தாள் கசிவுகளை தடுக்க நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நண்பர்களே, தனது முந்தைய வீடியோவைப் பார்த்ததற்கும், அதற்கு அன்பும் ஆதரவும் அளித்ததற்கும், உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்ததற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது எனவும், தேர்வு முறையின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *