
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், கடந்த 30 நாளில் இந்தோனேஷியாவில் 1,440 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 49 போ் உயிரிழந்தனா் 67 போ் மாயமாகினா்.வெள்ளப் பெருக்கெடுத்துள்ள ஆறுகளிலும், நிலச்சரிவின் இடிபாடுகளிலும் உடல்களை மற்றும் உயிருடன் பிழைத்திருக்கக்கூடியவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
கடந்த வாரம் பெய்த பருவமழை காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் ஆறுகள் கரை உடைந்தன.வெள்ளம் மலைப்பகுதி கிராமங்களைத் தாக்கி அடித்துச் சென்றது.2,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள் நிலச்சரிவில் புதையுண்தாக தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு தெரிவித்தது.இந்தோனேஷியா பசிபிக் நெருப்பு வளையம் என்ற புவியியல் மண்டலத்தில் அமைந்துள்ளது.
உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 90 சதவீதம் இந்த மண்டலத்தில் தான் பதிவாகிறது. அந்த வகையில் இந்தோனேஷியாவில் கடந்த 30 நாட்களில் 1,400 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் இறந்தனர்.ஆனால் சமீபத்திய நிலநடுக்கங்கள் சுனாமி உள்பட எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

